தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. தீபாவளி தேசிய அளவிலான பண்டிகை என்பதால் போக்குவரத்திற்கு வழக்கம்போல் டிமாண்ட் எழுந்துள்ளது. இந்நிலையில் முன்னணி தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, விமான டிக்கெட்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
விமான டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு 500 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது mobikwik wallet மூலம் கட்டணம் செலுத்தினால் 10% உடனடியாகக் கிடைக்கும். இதில் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை கேஷ்பேக் பெற முடியும். அக்டோபர் 31ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகையை பெற முடியும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.