அமெரிக்கநாட்டில் அழிவின் விளிம்பிலுள்ள நார்த் அட்லாண்டிக் ரைட் திமிங்கலங்களானது கடல்வாழ் உயிரின ஆர்வர்களின் கண்களில் தென்பட்டுள்ளது. அரிதினும் அரிதாக தென்படும் இந்த வகையைச் சேர்ந்த 3 திமிங்கலங்கள் மஸாஷுசெட்ஸ்ன் கேப் காட் பே கடற்பகுதியில் காணப்பட்டது. ஆனால் மீன்பிடி வலைகளில் சிக்கி இறப்பது, பெரிய கப்பல்களில் மோதி இறப்பது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 2010-ஆம் வருடம் முதல் இந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பருவநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் கடல்நீரின் வெப்பம் காரணமாக இந்த திமிங்கலங்கள் உண்ணும் இதர கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, குறிப்பிட்ட வகை திமிங்கல இனம் அழிந்து வருவதற்கு மிகப்பெரிய காரணம் என கூறப்படுகிறது. இதனிடையில் புளோரிடா முதல் கனடா வரையுள்ள கடற்பகுதியில் வெறும் 336 ரைட் திமிங்கலங்கள் மட்டுமே உயிர்வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.