துபையில் ஆன்லைன் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு ரூபாய்.10 கோடியை கேரள தொழிலாளி ஷானவாஸ் வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி ஷானவாஸ் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசான ரூ.50 லட்சம் திர்ஹாம் கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.
அதாவது 7,9,17,19,21 என்ற எண் தொடர் அவரை வெற்றியாளராக மாற்றி இருக்கிறது. இது தொடர்பாக ஷானவாஸ் கூறியிருப்பதாவது “வளைகுடா நாட்டில் சென்ற 15 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். 18 மாதங்களுக்கு மேல் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறேன். தற்போதுதான் பரிசு விழுந்து இருக்கிறது. இந்த பரிசுத்தொகையை வைத்து என் கடன்களை எல்லாம் அடைப்பேன். மீதம் உள்ள பணத்தை துபையில் தொழில் தொங்குவதற்கு பயன்படுத்த உள்ளதாக ஷானவாஸ் கூறினார்.