சினிமா துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான ஆஸ்கர் பரிந்துரை படத்தை தேர்வு செய்ய ஆஸ்கர் விருதுக்கு ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் இயக்குனர் ஷாஜி என்.காருண் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தியா சார்பில் அனுப்பப்பட உள்ள 14 படங்களின் பட்டியலில் மண்டேலா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. தமிழிலிருந்து தேர்வான ஒரு திரைப்படம் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது.
Categories