உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வாட்சாப் பயன்படுத்துபவர்கள் முக்கியமான chatகளை Pin செய்து கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் இருக்கிறது. 3 நம்பர்கள் அல்லது குரூப்கள் வரை நாம் பின் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை வாட்சாப் 5ஆக உயர்த்த உள்ளது. இதன்மூலம் இனி முக்கியமான 5 chatகளை நாம் கண்முன்னே நிறுத்திக் கொள்ளலாம். இன்னும் பல முக்கிய அப்டேட்களை வாட்சாப் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.