Categories
மாநில செய்திகள்

WOW: இது வேற லெவல்…. சூரிய ஒளியில் ஓவியம் வரைந்து அசத்தும் இளைஞர்…. குவியும் பாராட்டு….!!!!

மயிலாடுதுறை மாவட்டம் தோப்புத் தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். பொறியியலில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்டாரானிக்ஸ் படிப்பை முடித்து விட்டு, சென்னையில் பணிபுரிந்து வந்த இவர் ரத்தசோகை பாதிப்பால் கடந்த 2017-ல் பணியைத் தொடர முடியாமல் சொந்த ஊருக்கு திரும்பினார். இதையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்த விக்னேஷ், ஓவியக் கலையில் ஆர்வம்கொண்டு பென்சில் டிராயிங், த்ரீ-டி முப்பரிமாண தத்ரூப ஓவியம், சார்கோல் டிராயிங், ஆயில் பெயின்டிங் மற்றும் நுண் ஓவியங்களை கற்றுத்தேர்ந்தார். அதன்பின் சூரிய ஒளிக் கதிர்களை மரப்பலகையில் குவித்து, அதன் வாயிலாக நெருப்பை உருவாக்கி இவர் படைக்கும் சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் ஓவியங்களும் வரவேற்பை பெற்றுள்ளது.

சூரிய ஒளிக்கதிர்கள் ஓவியங்கள் வாயிலாக, கிரிக்கெட் வீரர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை தத்ரூபமாக விக்னேஷ் வரைந்துள்ளார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மைக்கேல் பாப்பாடாஸ்கி என்ற பிரபல ஓவியரை இன்ஸ்டாகிராமில் பார்த்துதான், சூரிய ஒளிக்கதிர் ஓவியம் மீது ஆர்வம்கொண்டு வரையத் தொடங்கியதாக விக்னேஷ் கூறினார். வெயில்தான் இந்த ஓவியத்துக்கான மூலதனம் ஆகும். இதனால் காலை முதலே வெயிலுக்காக காத்திருந்து ஓவியங்களை வரைந்து வருவதாக விக்னேஷ் கூறினார்.

இந்தியாவிலேயே சன்லைட் பர்னிங்வுட்ஆர்ட் ஓவியம் வரையும் முதல் ஓவியராக விக்னேஷ் உருவெடுத்து இருக்கிறார். தையல் தொழிலாளியாகவுள்ள இவரது தந்தையின் வருமானத்திலேயே விக்னேஷின் குடும்பம் நடந்து வருகிறது. அதிகபட்சம் இவருடைய ஓவியம் 12,000 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. இதற்கிடையில் ஆன்லைன் மூலம் சென்னையைச் சேர்ந்த சிறுவனுக்கு ஓவியக்கலையை கற்றுக்கொடுத்து வருவதாக கூறும் ஓவியர், அரசு வேலைவாய்ப்பு வழங்கினால் நூற்றுக்கணக்கான ஓவியர்களை உருவாக்கமுடியும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

Categories

Tech |