இந்தியாவில் ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டும் விதமாக ஸ்டார்ட்அப் பள்ளிகளை கூகுள் இந்தியா துவங்கியுள்ளது. நாட்டில் 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் 10,000 ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டும் அடிப்படையில் ஸ்டார்ட் அப் பள்ளியை துவங்கி இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் ஸ்கூல் என்பது, வளர்ந்துவரும் நிறுவனங்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கும்.
அத்துடன் பயன் உள்ள தயாரிப்பு உத்தியை வடிவமைப்பது, ரோட் மேப்பிங் மற்றும் தயாரிப்பு தேவைகள் குறித்த ஆவண மேம்பாடு ஆகியவை பற்றிய அறிவுறுத்தல் பாடத்திட்ட தொகுதிகளில் இடம்பெறும். 9 வாரங்களை கொண்ட இப்பயிற்சியில் ஈ-காமர்ஸ், சோஷியல் மீடியா, நெட்வொர்கிங் பிரிவில் உள்ள நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு கூகுள் நிறுவன மூத்த ஊழியர்கள் மற்றும் துறைசார்ந்த வல்லுனர்கள் பயிற்சி வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.