Categories
பல்சுவை

WOW: இந்த மனுஷனோட திறமை வேற லெவல்…. 27 அடி உயரத்தில் “Angel Of Death”….!!!!!

ஆல்ஃபி என்பவர் கடந்த 1990-ல் SE லண்டனில் பிறந்தார். அடுத்ததாக 3 வயதில் இருந்து பிரான்சில் வளர்ந்தார். அங்கு அவர் ஒரு கல் செதுக்குபவர் மற்றும் ஒரு சிற்பியாகப் உருவெடுத்தார். இதையடுத்து கடந்த 2013-ல் இங்கிலாந்துக்குத் திரும்பினார். அங்கு அவர் உலோகத்துடன் சிற்பம் செய்யத் தொடங்கி, அவரது தொழில் வாழ்க்கை தொடங்கியது. அந்த சமயத்தில் அவர் தன் முதல் திட்டமான லண்டனிலுள்ள டெஃப்ராவின் முகப்பில் அமர்ந்து இருக்கும் காண்டாமிருகத்தின் தலை முதல் சர்வதேச அளவில் பிரபலமான ஸ்பூன் கொரில்லா வரை பல்வேறு ஈர்க்கக்கூடிய சிற்பங்களை உருவாக்கியுள்ளார்.

மேலும் ஆல்ஃபி  1,00,000 க்கும் மேற்பட்ட ஆயுதங்களால் 27 அடி உயர சிற்பத்தை உருவாக்கினார். இந்த சிற்பத்தை Angel Of Death என்று சொல்கிறார்கள். இது தற்போது இங்கிலாந்தின் நகர சுற்றுப்பயணத்தில் உள்ளது. மேலும் இந்த சிற்பம் கத்தி குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக இருக்கிறது. கடந்த 2015/2016 ஆம் வருடத்தில் நாடு தழுவிய பொது மன்னிப்புக் காலத்தில் சரணடைந்து சேகரிக்கப்பட்ட 10,00,00 க்கும் மேற்பட்ட கத்திகளைப் பயன்படுத்தி ஆல்ஃபி ஒருவரே இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

Categories

Tech |