இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பிறகு இணையதளங்களின் பயன்பாடு கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. சமூக வலைதளங்களை பின்பற்றாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவிற்கு பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் ஸ்டாராக வேண்டும் என்றால் திரைப்படங்களிலும், டிவி சீரியல்களும் நடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டாலே போதும் அதிக பாலோயர்களை பெற்று ஸ்டார் ஆகலாம். அதன் மூலம் வருமானமும் பெறலாம்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒருவர் பதிவிடும் ரீல்ஸ் தங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில், இன்ஸ்டாகிராம் பயனர்கள் அவருக்கு ‘ஸ்டார்ஸ் (Stars)’ அனுப்பலாம். இந்த ஸ்டார்களை ரீல்ஸ் பதிவிட்ட அந்த நபர் பணமாக மாற்றிக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 1,000 பாலோவர்களை வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மட்டுமேஇந்த ‘ஸ்டார்’ அம்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.