ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு தொழில் கடன் வழங்க உள்ளது. இதில் 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வட்டி விகிதத்தில் 0.2 சதவீதம் சலுகை என அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 200 நகரங்களில் இந்த கடன் சேவை கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் ஆகஸ்ட் 20 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட ஐந்து நகரங்களில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது நாட்டின் 200 நகரங்களுக்கு விரிவு படுத்தப்படுகிறது.
Categories