சந்திரன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை வானில் நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வானில் சூரியன் மறைந்த பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இந்த நிகழ்வை காணலாம். அப்போது செவ்வாய் மற்றும் வெள்ளிக் கோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். கோள்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் நாளை முதல் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Categories