பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது காரணமாக சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சமையல் எண்ணெயின் விலை மிக அதிக அளவில் உயர்ந்து இருந்தது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இதுபோன்ற விலை உயர்வு காரணமாக மேலும் இன்னல்களை சந்தித்தன. தற்போது பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ளது. இதனால் சூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு ரூபாய் 195 இருந்து ரூபாய் 170 ஆகவும், பாமாயில் என்னை லிட்டருக்கு ரூபாய் 155 லிருந்து ரூபாய் 120 ஆகவும், தேங்காய் எண்ணெய் ரூபாய் 245 லிருந்து ரூபாய் 215 ரூபாயாகவும். நல்லெண்ணெய் ரூபாய் 290 இல் இருந்து தற்போது 270 ரூபாயாகவும் குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.