ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது.
அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் சக்கை போடு போடுகிறது. குறிப்பாக இந்தியாவில் இப்படம் 5 நாட்களில் 164 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் 40 கோடி ரூபாய் வசூல் செய்த அவதார், 5ஆம் நாளில் 16.63 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களால் சிறிதளவு வசூல் குறைந்துள்ளது. ஆனால் கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டே இப்படம் வெளியிடப்பட்டது.