Categories
உலக செய்திகள்

WOW…! “என்ன ஒரு அழகான குழந்தை”…. 3 கோடிக்கு தாரியா…? தாயிடம் பேரம்…. அடித்து பிடித்த போலீஸ்..!!

அமெரிக்காவில் தாயிடம் சென்று 3 கோடி ரூபாய் தருகிறேன் உங்கள் குழந்தையை தன்னிடம் தருமாறு கேட்ட பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

அமெரிக்காவில் தாயொருவர் 12 மாத குழந்தையுடன் சுய பரிசோதனைக்காக வால்மார்ட்டின் முன்பாக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஏற்கனவே அழகான குழந்தை ஒன்றை வாங்க வேண்டுமென்று நினைப்பிலிருந்த 49 வயது பெண்மணி ஒருவர் அந்த தாயின் அருகே வந்துள்ளார்.

இதனையடுத்து அந்த 49 வயது பெண்மணி சுய பரிசோதனைக்காக நின்றுகொண்டிருந்த தாயிடம் சென்று நீல நிற கண்களையும், பொன்னிற முடியையுமுடைய உங்களது இந்த குழந்தையை 3 கோடி ரூபாய்க்கு தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார்.

இதனால் ஷாக்கான அந்தத் தாய் இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை ஏற்ற போலீஸ் குழந்தையை தாயிடம் பேரம் பேசிய 49 வயது பெண்மணியை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

Categories

Tech |