ஒடிசாவைச் சேர்ந்த 2 1/2 வயது குழந்தை “அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை” எனும் உலக சாதனையை படைத்துள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த 2 1/2 வயது குழந்தை அன்வி விஷேஷ் அகர்வால் ஆவார். இவர் 9 மாத குழந்தையாக இருந்தபோதே ஓவியங்கள் வரையத் தொடங்கியுள்ளார். அதன்படி இதுவரையிலும் 72 ஓவியங்கள் வரைந்து “அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை” என்ற உலக சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லண்டன் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம் பெற்றுள்ளார். இதை தவிர அன்வி 1 வயது ஒன்பது மாத குழந்தையாக இருந்த போது அந்நிய மொழியான ஸ்பானிஷ் மொழியின் 42 ஒலிப்பு ஒலிகளை பேசி இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.