Categories
உலக செய்திகள்

Wow…. ஒரு பவுண்டுக்கு வாங்கிய வீடு…. அசர வைக்கும் அளவுக்கு மாளிகை ஆக்கிய பெண்….!!

பிரித்தானியாவில் 1 பவுண்டுக்கு  வாங்கிய வீட்டை மாளிகையாக்கிய  பெண். 

2015-ல் Liverpool John Moores பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியாக இருந்தவர் Maxine Sharples. ஒரு பவுண்ட் திட்டத்தின் மூலம் வீட்டை விண்ணப்பித்து வாங்கியுள்ளார். பாழடைந்த நிலையில் உள்ள இந்த வீடு  Watertree-யில் உள்ள Webster சாலையில் அமைந்துள்ளது. இந்த வீட்டை வாங்கிய பிறகு, மாக்சின் தனது சொந்த பணத்தையும் வளங்களையும் பயன்படுத்தி நகர சபையுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அதை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்துள்ளார். அவரைப் பொறுத்தவரை இது ஒரு நீண்ட, சோர்வுற்ற செயல்முறையாகும்.  இவருடைய வயது 35 ஆகிறது. இவர் யோகா ஆசிரியரான பணியாற்றுகிறார்.

இந்த வீட்டின் சீரமைப்புப் பணிகளின் போது ஒரு வாடகை வீட்டின் வாழ்ந்து வந்தார். பெரும்பலான வேலைகளை அவரே செய்துள்ளார். மேலும் சுழலும் சுத்தியலால் வீட்டை செங்கல்லாக மாற்றுவதற்கு ஒன்பது மாதங்கள் ஆனது மற்றும் அண்டை வீட்டாரிடமிருந்து மின்சாரம் வாங்கி வீட்டு வேலையைை செய்தார். இங்கு கூரையின்மீது ஒரு மரம் வேரூன்றி வீடு துளையிடப்பட்டிருந்தது, மேலும், சுவர்கள் ஊறிப்போய் வீட்டுக்குள் நீர் உட்புகுந்திருந்தது மற்றும் எலி தொல்லைகள் என எல்லா பிரச்சினைகளும் இருந்தது. இதனை தொடர்ந்து 27  மாதங்கள் கடினமாக உழைத்து அந்த பாழடைந்த வீட்டை அவர் அழகான இடமாக, மனிதர்கள் வாழக்கூடிய இல்லமாக மாற்றியுள்ளார்.

 

Categories

Tech |