வருகிற 24-ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது அடுத்த எலக்ட்ரிக் பைக்கை Ola நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்கூட்டர் 110 சிசி கொண்டது என்றும் டிஸ்ப்ளே மோடுகள் அனைத்தும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதுமட்டுமின்றி ஒரு முறை பேட்டரியை ஜார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.1 வேரியண்ட் என்று இந்த பைக்குக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பைக்கில் நார்மல், ஸ்போர்ட்ஸ், மோட் என பல்வேறு மோட்கள் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.