பெல்ஜியத்தில் வசித்துவரும் இளம் பெண்ணொருவர் 155 நாட்கள் சிறிய விமானம் ஒன்றில் உலகையே வலம் வந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
பெல்ஜியத்தில் சாரா ரூதர்ஃபோர்டு என்னும் 19 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 155 நாட்கள் சிறிய விமானம் ஒன்றில் உலகை வலம் வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த வியாழக்கிழமையன்று உலகை வலம் வந்து முடித்த சாரா மேற்கு பெல்ஜியத்தில் தரையிறங்கியுள்ளார். இந்நிலையில் சாரா இளம் வயதிலேயே உலகை வலம் வந்த சிங்கப் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.