Categories
உலக செய்திகள்

Wow சூப்பர்…. கற்பனை உலகம் எப்படி இருக்கும்னு தெரியுமா….? பார்வையாளர்களை கவர்ந்த கண்கவர் நிகழ்ச்சி….!!

கற்பனை உலகத்தை மையமாக கொண்டு நடைபெற்ற பிரம்மாண்ட திருவிழாவை பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

பிரான்ஸ் நாட்டின் லீலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கற்பனை உலகத்தை மையமாக கொண்டு பிரம்மாண்டமாக உட்டோப்பியா திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ளது.

இந்த திருவிழாவில் பறக்கும் மீன் பொம்மை, வண்ணமயமான குதிரை, முயல் பொம்மைகள், மனித உருவத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள மரப்பாச்சி பொம்மை, நோய்வாய்ப்பட்ட டோடோ பறவை, கடல் குதிரை மற்றும் சிமெரா விலங்கு பொம்மை போன்றவை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இசை மற்றும் நடன கலைஞர்கள் அவர்களுடன் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளனர். மேலும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |