அமெரிக்காவிலுள்ள சாலை ஒன்றிற்கு உலகப் பொதுமறை திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா மாநிலத்தின் பிரதிநிதியான டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது விர்ஜினியாவிலுள்ள பேர்பெக்ஸ் என்னும் பகுதியிலிருக்கும் சாலை ஒன்றிற்கு புகழ்வாய்ந்த திருவள்ளுவரின் பெயர் சூட்டப்படவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சாலை ஆங்கிலத்தில் valluvar way எனவும், தமிழில் வள்ளுவர் தெரு என்றும் அழைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.