Categories
உலக செய்திகள்

WOW சூப்பர்….! போர் முனையில் முளைத்த காதல்…. அசரவைத்த உக்ரைன் வீரர்…. வைரலாகும் வீடியோ….!!!

உக்ரைன் வீரர் காதலியிடம் தனது காதலை யாரும் எதிர்பாராத வகையில் வெளிப்படுத்திய வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது.

உக்ரைனில் போர் அதிகரித்துவரும் நிலையில் கீவ் தலைநகரில் அருகே உள்ள பாஸ்டிவ் பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் தன் காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

அந்த வீடியோவில் அப்பகுதியில் செல்லும் வாகனங்களை நிறுத்தி சிலர் சோதனையில் ஈடுபடுவது போல நடித்தனர். அப்போது அந்த வழியாக வந்த உக்ரைன் வீரரின் காதலி சென்ற காரையும் நிறுத்தி சோதனை நடத்துவது போல் நடித்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அந்த வீரர் தனது காதலியின் முன் மண்டியிட்டு, காதலிக்காக வாங்கி வந்த மோதிரத்தை அவர் முன் நீட்டி தன் காதலை வெளிப்படுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து சற்றும் எதிர்பாராத அந்த பெண் கூச்சலிட்டுக் ஆனந்தம் அடைந்தார். பின்னர் அந்த பெண்ணின் விரலில் மோதிரத்தை உக்ரைன் வீரர் மாட்டி உள்ளார். இதனை தொடர்ந்து அந்தப் பெண் தன் அன்பை வெளிகாட்டும் வகையில் தனது காதலரை கட்டியணைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் இந்த வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் சி பி எஸ் மியாமி நிறுவன தொகுப்பாளர் கெண்டிஸ் கிப்சன் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Categories

Tech |