கூகுள் நிறுவனம் மகளிர் தினத்தை முன்னிட்டு அனிமேஷன் காட்சிகள் இடம் பெற்ற டூடுல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
உலகம் முழுவதும் பெண்களை சிறப்பிக்கும் நோக்கில் (இன்று) மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த டூடுலில் உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாச்சாரதை சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து துறைகளிலும் முன்னேறியிருக்கும் பெண்கள் அனைவரையும் குறிக்கும் வகையில் அனிமேஷன் காட்சிளும் இடம் பெற்று உள்ளது.