Categories
உலக செய்திகள்

Wow சூப்பர்…. 9 வயதில் ஆப் டெவலப்பர்…. அசத்தும் இந்திய சிறுமி…. வாழ்த்து தெரிவித்த ஆப்பிள் டிம் குக்….!!

துபாய் நாட்டில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த ஹனா முஹம்மது ரஃபீக் என்ற 9 வயதுடைய சிறுமி ஐஓஎஸ் தளத்திற்கு “ஹனரஸ்” என்ற கதை சொல்லும் செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலி மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கான கதைகளை தங்களது சொந்த குரலில் பதிவு செய்ய முடியும் என தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஹனா முஹம்மது ரஃபீக் என்ற சிறுமி கூறியதாவது, “தனக்கு ஐந்து வயதில் குறியீட்டும் முறை அறிமுகமானது மேலும் இந்த ஹனரஸ் செயலியை உருவாக்க எனது பயன்பாட்டில் இருக்கும் பார்ட்டி ரெடிமேட், குறியீடுகள், நூலகங்கள் அல்லது வகுப்புகள் ஆகியவற்றில் பெரும்பாலானவற்றை நான் தவிர்த்து விட்டேன் என ஆப்பிளின் சிஇஓ டீம் குக்கிற்கு மின்னஞ்சல் ஒன்றை முதலில் அனுப்பியுள்ளேன். மேலும் தான் இணைய ஐஓஎஸ் டெவலப்பர் என்று கூறி கடிதமும்  எழுதியுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டீம் குக் கூறியதாவது, ” இவ்வளவு இளம் வயதிலேயே உங்களை ஈர்க்கக்கூடிய  சாதனைகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள் அதை கடைப்பிடியுங்கள் எதிர்காலத்தில் நீங்கள் அற்புதமான விஷயங்களை செய்வீர்கள்” என்று அவர் பாராட்டியுள்ளார்.  மேலும் கலீஜ் டைம்ஸ் அறிக்கையின்படி, மின்னஞ்சல் முதலில் திறக்கப்பட்ட போது முகமது ரஃபீக் தூங்கிக் கொண்டிருந்தார் என்றும் அப்பொழுது நான் அவளை  எழுப்பி அவளுக்கு செய்தியைத் தெரிவித்தேன் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |