செஸ்ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 700 மாணவிகள் செஸ்ஒலிம்பியாட் சின்னம் வடிவில் நின்றவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி அசத்தியுள்ளனர்.
இதற்கிடையில் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். இதையடுத்து கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு வரவேற்று பேசினார். இதற்கு முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.