சேலம் மாவட்டத்தில் உள்ள ஏத்தாப்பூர் பகுதியில் உள்ள வடகாட்டில் வெங்கடேசன் என்பவர் வசித்துவருகிறார். இவரின் தோட்டத்தில் விளைந்த சேனை கிழங்குகளை அறுவடை செய்து தனது வீட்டில் பதப்படுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் அனைவரும் அதிசயிக்கும் வகையில் சேனை கிழங்கில் இருந்து ஒரு அடி உயரத்திற்கு அழகான தோற்றத்தில் ஒற்றைப் பூ பூத்துள்ளது. இதனை பார்த்த விவசாயிகள் அனைவரும் வியப்படைந்தனர். இந்தப் பூவை காண்பதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரை இப்படி ஒரு பூவை யாருமே பார்த்ததில்லை என்றும் கூறுகின்றனர். இது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories