Categories
சென்னை மாவட்ட செய்திகள்

WOW: டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்?…. அதிகாரிகள் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடங்களில் வரும் 2025ம் வருடம் ஜூலை மாதம் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த வழித்தடங்களில் டிரைவர் இன்றி இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை (78 பெட்டிகள்) தயாரிப்பதற்காக “அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட்” இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 946 கோடியே 92 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்குரிய நிதியை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இதனிடையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் 2024 ஆம் வருடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த தகவல்களை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர் .

Categories

Tech |