Categories
பல்சுவை

WOW: “தங்கையின் முதல் நடையால் செம ஹேப்பியான குட்டி அண்ணன்”… வைரலாகும் வீடியோ… குவியும் கமெண்ட்…!!!!!!

குழந்தைகள்தான் குடும்பங்களில் உண்மையான செல்வங்களாகும். இவர்கள் வீட்டில் உள்ள அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாக திகழ்கின்றனர். சிறு குழந்தைகளின் ஒவ்வொரு ஆசைகளையும் சிறிய மற்றும் பெரிய குறும்புகளையும் பார்த்து நாம் ரசித்து சிரித்து மகிழ்கின்றோம் ஒரு குழந்தை முதன்முறையாக தனது கால் கொண்டு நடக்க தொடங்கும் போது அந்த தருணம் அவரது பெற்றோருக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும் ஆனால் பெற்றோர் மட்டுமல்லாமல் குழந்தையின் அண்ணா, அக்கா, உடன் பிறந்தவர்கள் என அனைவருக்கும் இது ஒரு அற்புதமான நேரமாக தான் இருக்கும். இந்த நிலையில் சமீபத்தில் இது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. இதில் ஒரு சிறுவன் தனது தங்கை தனது கால்களால் முதல் முதலாக நடப்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்து இருக்கின்றான். அந்த சிறுவனால் தனது தங்கை முதன்முதலாக நடப்பதை பார்த்து நம்ப முடியவில்லை.

 

 

இதனால் அந்த சிறுவன் சந்தோஷத்தின் உச்சிக்க்கு செல்கின்றான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் கேப்ஷனில் தனது தங்கை முதன்முறையாக நடந்து செல்வதை பார்த்து அவரது அண்ணன் காட்டும் இனிமையான ரியாக்சன் என எழுதப்பட்டிருக்கின்றது. வைரலான இந்த வீடியோவில் ஒரு சின்ன குழந்தை தனது அண்ணன் பக்கத்தில் இருப்பதை காண முடிகின்றது. திடீரென அந்த குழந்தை எழுந்து நின்று தானாக நடக்க தொடங்குகிறது. அதனைப் பார்த்து அண்ணனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த நிலையில் குழந்தையின் அண்ணனும் ஒரு சிறுவன் தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த சிறுவனின் முகத்தில் உள்ள வெளிப்பாடுகள் அவனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றது. இந்த நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் இதில் பயனர்கள் தங்கள் அழகான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |