தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 6000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு துறை சார்பாக நடத்தப்படும் 33,000 ரேஷன் கடைகளில், 21,600 விற்பனையாளர்கள் மற்றும் 3,800 எடையாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடையில் வேலைக்கு சேரும்போது தொகுப்பூதியத்திற்கு பதிலாக துவக்க நிலையிலேயே 12000 ரூபாய் வழங்கவும், பணி அனுபவத்தை பொறுத்து 2500 முதல் 6000 வரை ஊதிய உயர்வு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாக உள்ளது.
தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊதிய உயர்வு செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊதிய உயர்வு அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது.