தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் வெளியில் சென்ற சில பயிற்சிகளை மேற்கொள்ள முடியாததால் முக்கியமான தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி, வங்கி மற்றும் காவல்துறை உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்தலுக்காக இணைய வழி பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும். பயிற்சி வகுப்புகளில் CISCO WEBXE இணைய பக்கத்தில் மூலமாகவோ அல்லது CISCO App மூலமாகவோ கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை அணுகவும்.