Categories
மாநில செய்திகள்

WOW: தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் பிரதமர் மோடி….!!!

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வரும் பிரதமர் மோடி மக்களை கவர எம்ஜிஆர் பாடல் ஒன்றை பாடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அது மட்டுமன்றி அனைத்துக் கட்சியினரும் தமிழகம் முழுவதிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக வரும் பிரதமர் மோடி, மக்களை கவருவதற்காக எம்ஜிஆர் பாடல் ஒன்றைப் பாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக மோடி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து நடித்த படத்திலிருந்து ஒரு பாடலை தேர்வு செய்து, அதற்காக நேரம் ஒதுக்கி மனப்பாடம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |