இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போன்ற சாம்பியன் டிராபிக் போன்ற வெற்றிகளை கொடுத்த திறமையான கேப்டன். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகினா.ர் கடந்த ஆண்டு இவர் ஓய்வு அறிவித்தார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் இவர் ஆடி வருகிறார். கேப்டன் தோனி எப்பொழுதும் விதவிதமான ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்வது வழக்கம்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு கெட்டப்பிலும் தோனியின் ஹேர்ஸ்டைல் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. அந்த வகையில் தற்போது புதிய ஹேர்ஸ்டைல் ஒன்று செம வைரல் ஆகியுள்ளது. அதில் அவர் அஞ்சான் படத்தில் சூர்யா வரும் ஹேர்ஸ்டைல் கெட்டப்பில் கலக்கலாக உள்ளார். டோனி தல்லனா சும்மாவா என பதிவிட்டு ரசிகர்கள் அவரது புகைப்படத்தை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பலர் இந்த கெட்டபிற்கு மாறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.