தற்போதைய காலகட்டத்தில் நிறைய பேர் தங்களது பணத்தை ரிஸ்க் எதுவும் இல்லாத இடத்தில் முதலீடு செய்வதற்கு விரும்புகின்றனர். அவ்வாறு நீங்களும் முதலீடு செய்ய விரும்பினால் தபால் நிலைய சேமிப்பு சிறந்த தேர்வாக இருக்கும். தபால் நிலையங்களில் நிறைய சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான திட்டம் தான் “கிராம் சுரக்ஷா யோஜனா”. இந்தத் திட்டத்தின் கீழ் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்ய முடியும். இதில் காப்பீட்டு தொகையாக 10,000 ரூபாய் முதல் 10 லட்சம் வரை உங்களுக்கு கிடைக்கும்.
அதற்கான பிரீமியத்தை நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் செலுத்தலாம். பிரீமியம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தில் போனஸ் உடன் கூடிய உறுதி தொகை கிடைக்கிறது. இதில் பாலிசிதாரர் 80 வயதை அடைந்த பிறகு அல்லது மரணம் அடைந்தால் நாமினிக்கு அல்லது சட்டபூர்வ வாரிசுக்கு உரிய தொகை வழங்கப்படும். இந்த பாலிசியில் கடன் பெறும் வசதியும் உள்ளது. ஆனால் பாலிசி வாங்கிய நான்கு ஆண்டுகளுக்கு பிறகுதான் கடனை பெற முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் 19 வயதில் 10 லட்சம் ரூபாய் காப்பீட்டுக்கான பாலிசி வாங்கினால், 55 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1515 பிரீமியம் செலுத்த வேண்டும். ஐம்பத்து எட்டு வருடங்களுக்கு வாங்கினால் மாதாந்திர பிரீமியமாக 1463 ரூபாய் செலுத்த வேண்டும். 55 வருட பிரீமியம் முடிவடைந்தவுடன் பாலிசிதாரருக்கு ரூ.31.60 லட்சம் கிடைக்கும். 58 ஆண்டு பிரீமியத்தில் 33.40 லட்சம் ரூபாயும், 60 ஆண்டு பிரீமியத்தில் ரூ.34.60 லட்சமும் கிடைக்கும். அதாவது இந்த திட்டத்தில் தினமும் 47 ரூபாய் மட்டும் நீங்கள் டெபாசிட் செய்த 35 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே தாமதிக்காமல் இந்தத் திட்டத்தில் உடனே இனைந்து பயன்பெறுங்கள்.