Categories
பல்சுவை

Wow..!! நம்மளா இவ்வளவு அழகு…. கண்ணாடியை பார்த்து குதிரை செய்த செயல்…. ட்விட்டரில் அசத்தும் காணொளி…!!

தற்போதைய நவீன உலகில் சமூக வலைதளங்களின் மூலமாக ஏராளமான காணொளிகள் வைரலாகி மக்களை சிரிக்க வைப்பதும் சிந்திக்க வைப்பதும் நடைமுறையில் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்யும் சேட்டைகள் காணொளியாக வைரல் ஆவதோடு சில சமயங்களில் மிருகங்களின் வினோத செயல்களும் சமூக வலைதளத்தில் வெளியாகும்.

அவ்வகையில் தற்போது குதிரை ஒன்றின் நடவடிக்கை காணொளியாக பதிவு செய்யப்பட்டு ட்விட்டரை அசத்தி வருகிறது. முகம் பார்க்கும் கண்ணாடியை யாராக இருந்தாலும் இரண்டு நிமிடமாவது அசையாமல் நின்று நம்மை நாமே பார்த்துக் கொண்டிருப்போம். அது மனிதர்களுக்கு மட்டுமல்லாது இந்த காணொளியில் வரும் குதிரைக்கும் பொருந்தியுள்ளது.

சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியை பார்த்த ஒரு குதிரை மீண்டும் மீண்டும் அதையே பார்த்துக் கொண்டிருந்தது. சற்று விலகி சென்றுவிட்டு மீண்டும் வந்து கண்ணாடியை பார்த்து ஆச்சரியமடைந்தது என்றே கூறலாம். பின் ஒரு கட்டத்தில் வேறு ஒரு குதிரை இருக்கிறது என நினைத்து அது வெளியே ஓடி விட்டது. இந்த காணொளியை பார்த்த பலரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிலர் குதிரை தன்னைப் போன்ற ஒரு அழகான குதிரை வெளியில் இருப்பதாக நினைத்து அதை பார்க்க ஓடுவதாகவும், சிலர் தான் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்று நினைத்து மீண்டும் மீண்டும் குதிரை கண்ணாடியை பார்ப்பதாகவும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இது உங்களுக்கான நேரம் நீங்களும் அந்த காணொளியை பார்த்து ரசியுங்கள்.

https://twitter.com/i/status/1378700015867195395

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |