தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியான நிலையில் நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் பலரும் மிகவும் அதிர்ச்சியாகினர். ஏனெனில் நயன்தாரா கண்ணமெல்லாம் ஒட்டி மிகவும் ஒல்லியாக பார்ப்பதற்கு முதிர்ச்சியாக இருந்தார். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோ தற்போது வெளியான நிலையில் அதை பார்த்து ரசிகர்கள் பலரும் மிகவும் வியந்து போயுள்ளனர்.
இந்த போட்டோவில் நயன்தாராவின் கன்னங்கள் மிகவும் புசுபுசுன்னு இருப்பதோடு, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். கடந்த 11-ஆம் தேதி நயன்தாரா பார்ட்னராக இருக்கும் லிப்பாம் கம்பெனியின் முதல் பிறந்தநாள் வந்த நிலையில் அதை தன்னுடைய நிறுவன ஊழியர்களுடன் நயன்தாரா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.