Categories
கரூர் மாவட்ட செய்திகள்

WOW: பயன்பாட்டுக்கு வந்த தானியங்கி எந்திரம்…. அதிகாரி வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

கரூர் மாநகராட்சி சார்பாக பாதாளசாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் கழிவுகளை நீக்கம் செய்ய ரூபாய்.42 லட்சம் மதிப்பில் தானியங்கி புதை வடிகால் எந்திரம் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எந்திரத்தை பயன்படுத்தி பாதாள சாக்கடை தூய்மை செய்யும் பணி நேற்று நடந்தது. இதை  கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் போன்றோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த தானியங்கி புதை வடிகால் அடைப்பு நீக்கும் எந்திரத்தில் ஸ்டேண்டு மற்றும் டிரோன் என்ற 2 யூனிட்டுகள் அமைந்துள்ளது. பாதாள சாக்கடைகளிலுள்ள கழிவுகள் மற்றும் தேவையற்ற மண்களை அள்ளுவதற்கும், அதை சுத்தப்படுத்துவதற்கும் இந்த யூனிட்டுகள் பயன்படுகிறது.

இந்த தானியங்கி எந்திரத்தின் ஸ்டேண்டு யூனிட்டில் 1 கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் யூனிட்டில் 3 கண்காணிப்பு கேமரா என மொத்தம் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் வாயிலாக பாதாள சாக்கடைகளில் அடைப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளை அறிந்துகொள்ளலாம். இத்தானியங்கி எந்திரம் பாதாள சாக்கடையில் 8 மீட்டர் ஆழம் வரை சென்றும், 180 டிகிரி சுற்றளவிற்கு சென்றும் செயல்படுகிறது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது, மாநகராட்சி ஊழியர்களுக்கு இந்த நவீன தானியங்கி புதை வடிகால் அடைப்பு நீக்கும் எந்திரத்தை இயக்குவதற்கு ஒரு வார காலம் பயிற்சியளிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் எனவும் இதன் வாயிலாக மனித கழிவுகளை மனிதனே அள்ளும் முறை குறையும் எனவும் கூறினார்.

Categories

Tech |