Categories
தேசிய செய்திகள்

WOW! பெண்களுக்கு விடுமுறை, 10% தள்ளுபடி – அரசு அதிரடி அறிவிப்பு…!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டு வருகிறது. மேலும் பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உள்ளனர். ஆனாலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகின்றது. இந்த  நிலையில் வருகிற மார்ச் 8ஆம் தேதி பெண் மகளிர் தினத்தையொட்டி ஆந்திர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அன்றைய தினத்தில் பெண்களுக்கு மொபைல் போன் வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. செல்போன் மூலம் பெண்கள் தங்களுடைய  பாதுகாப்புக்கான திஷா செயலியை பதிவிறக்கம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |