இந்திய அஞ்சல் துறையில் நீங்கள் சேமிப்பதன் மூலம் வங்கியை விட இரண்டு மடங்கு லாபம் உங்களுக்கு கிடைக்கும். இதில் குறைந்த தொகையில் முதலீடு செய்வதால் சாமானிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனிடையே தற்போது பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்கு உகந்த திட்டங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அவ்வகையில் முதலாவதாக தபால் அலுவலக சேமிப்பு கணக்கு என்ற திட்டத்தில் சேமித்தால் வருடத்திற்கு நான்கு சதவீதம் வட்டி கிடைக்கும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 50 ரூபாய் இருப்பு தொகையாக வைத்துக் கொண்டால் போதுமானது.
அடுத்து பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வருடத்திற்கு 7.1 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும்.அதில் அவசர தேவை மற்றும் உயர்கல்வி தேவை ஆகியவற்றிற்கு முன்கூட்டியே கணக்கை முடித்துக் கொள்ள வசதியும் உள்ளது. இதில் குறைந்தபட்ச இருப்பு தொகை 500 ரூபாய் இருக்க வேண்டும்.
இதற்கு அடுத்ததாக தொடர் பைப்பு சேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு 5.8% வரை வட்டி விகிதம் வழங்கப்படும். இதில் குறைந்தபட்சம் 100 ரூபாய் செலுத்தலாம். அடுத்ததாக சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 7.6% வட்டி விகிதம் கிடைக்கும்.குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். அடுத்து கிசான் பிகாஸ் பத்ரா திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும். இதில் பெண் குழந்தைகளுக்கு என சேமிப்பு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்.
அடுத்து தபால் அலுவலக நேர வகுப்பு கணக்குத் திட்டத்தில் குறைந்தபட்சம் வாய்ப்புத் தொகையாக ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பட்டியை தொடர் வைப்பு நிதியாக மாற்றிக் கொள்ள முடியும்.இந்த தபால் நிலைய திட்டங்களில் பெண் குழந்தைகள் தங்களின் வயதுக்கேற்ப சேமிப்பு கணக்கை தொடங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.