Categories
தேசிய செய்திகள்

WOW: மணிக்கு 180 கிலோ மீட்டர்!…. சாதனை படைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்….!!!!!

இந்தியாவின் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நவீன அம்சங்களுடன் மற்றும் சிறப்பு வசதிகளுடன் அதிவேகத்தில் செல்லகூடிய அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், குளிரூட்டப்பட்ட சேர் கார் வசதிகளுடன் கூடிய பெட்டிகள் இருக்கிறது. மேலும் 180 டிகிரி அளவுக்கு சுழலகூடிய திறன் படைத்த சுழலும் நாற்காலி ரயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயிலானது சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று சாதனை பதிவுசெய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய ரயில்வே மந்திரி அஷ்வனி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் “கோட்டா-நாக்டா பகுதிகளுக்கு இடையில் வந்தேபாரத்-2 எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் துவங்கியது. அது மணிக்கு 120, 130, 150 என கடந்து 180 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது என தெரிவித்துள்ளார். முதற்கட்ட ஆய்வின் போது வந்தே பாரத் ரயில் நீரால் தூய்மைசெய்யப்பட்டது. இது தவிர ரயிலின் அனைத்து வகையான உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.

பல வேக மட்டத்தின் அடிப்படையில் கோட்டா மற்றும் நாக்டா ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் போகும்போது இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகளின் அசைவுகளும் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கென ஆர்.எஸ்.டி.ஓ. (ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரநிர்ணயம்) அமைப்பின் குழு ஒன்று பணியில் ஈடுபட்டது. இப்பகுதிகளில் 6 கட்டங்களாக நடைபெற்ற அடுத்தடுத்த சோதனை ஓட்டத்தில் ரயிலானது பல இடங்களில் மணிக்கு 180 கி.மீ. வேகம் எட்டி சாதனை பதிவுசெய்தது.

Categories

Tech |