Categories
தேசிய செய்திகள்

WOW… மாணவர்களுக்கு Smartphone… வந்தது மகிழ்ச்சி செய்தி…!!!

கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்க வித்யாதன் என்ற பெயரில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று முத்தூட் பின்கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றன. இருப்பினும் ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்க முடியாமல் பல மாணவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு உதவும் வகையில் வித்யா தன் என்ற பெயரில் வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தை முத்தூட் பின் கார்ப் நிறுவனத்தின் தலைவர் தாமஸ் ஜான் முத்தூட் அறிவித்துள்ளார்.

மேலும் முதலில் வரும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு இந்த கடன் வழங்கப்படும் என்றும் நிறுவனத்தின் 3600 கிளைகளிலும் இந்த கடன் வசதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி பள்ளி அடையாள அட்டையின் நகலை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆறு மாதத்தில் கடனை திரும்பச் செலுத்த வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு வட்டி கிடையாது.

Categories

Tech |