ஒடிசா மாநிலமான புவனேஸ்வரில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் “சென்சார் பூங்கா” திறக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு உள்ள இந்த சென்சார் பூங்காவில் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் மகிழ்ச்சியாக பொழுது போக்குவதற்கான வசதிகள் இருப்பதாக புவனேஸ்வர் மேயர் சுலோச்சனா தாஸ் தெரிவித்து உள்ளார்.
மொத்தம் 37 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட பாதைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.