நாட்டில் இருசக்கர வாகனத்துறையில் 100 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு அடுத்த படியாக, 125 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. இந்த பைக்குகள் வலுவான எஞ்சினுடன் நல்ல மைலேஜ் மற்றும் கவர்ச்சி கரமான வடிவமைப்புடன் இருக்கிறது. இந்த 125 சிசி செக்மென்ட்டில் பைக்குகளின் வரிசையில் உள்ள “ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டரைப்” (Hero Super Splendor) பற்றி தெரிந்து கொள்வோம். ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான பைக் மற்றும் அதிகளவு விற்பனையாகும் இருசக்கர வாகனமாக இருக்கிறது. இந்த பைக்கின் விலை மற்றும் அதன் மைலேஸ் அனைவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. நீங்கள் இருசக்கர வாகன ஷோரூமுக்கு சென்று ஹீரோசூப்பர் ஸ்பிளெண்டர் வாங்க விரும்பினால், அதற்கென ரூபாய்.77,500 முதல் ரூ.81,400 வரை செலவழிக்க வேண்டும்.
எனினும் உங்களிடம் அவ்வளவு பட்ஜெட் இல்லையெனில், வெறும் 25 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் இந்த பைக்கை நீங்கள் வீட்டிற்கு ஒட்டிசெல்லலாம். அதன் விபரங்கள் மற்றும் சலுகைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். செகண்ட்ஹேண்ட் வாகனங்களை வாங்குவது, விற்பது தொழிலில் ஈடுபட்டுள்ள ஆன்லைன் இணையதளங்களிலிருந்து ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் வாகனத்துக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி தகவல்கள் பெறப்பட்டது. இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகளின் விபரங்களை உங்களுக்கு சொல்கிறோம். முதல்சலுகை OLX இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. இங்கு ஹீரோசூப்பர் ஸ்பிளெண்டரின் 2012 மாடல் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதன் விலையானது ரூபாய்.15,000 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கை வாங்கும்போது உங்களுக்கு எந்த நிதிதிட்டமும் (Finance) (அல்லது) கடனும் (Loan) கிடைக்காது. ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டரின் 2014 மாடல் பட்டியலிடப்பட்டு உள்ள DROOMஇணையதளத்தில் 2-வது சலுகை வந்துள்ளது. அதன் விலையானது ரூபாய்.17,500 ஆகும். இந்த பைக் வாயிலாக நீங்கள் நிதித்திட்டத்தைப் பெறலாம். 3வது சலுகை BIKE4SALE இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது. இங்கு ஹீரோசூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக்கின் 2015 மாடல் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலையானது ரூபாய்.20,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக்கில் எவ்விதமான சலுகையோ (அல்லது) நிதி திட்டமோ வழங்கப்படாது.
ஹீரோசூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக்கின் எஞ்சின் மற்றும் மைலேஜ் குறித்த முழு விவரம் பற்றி தெரிந்து கொள்வோம்
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டரில் நிறுவனம் 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை வழங்கி இருக்கிறது. இந்த எஞ்சின் 10.8 பிஎஸ் பவர் மற்றும, 10.6 என்எம் பீக்டார்க்கை உருவாக்குகிறது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பைக்கின் மைலேஜ் பற்றி இந்த ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக் 83kmpl மைலேஜ் தருவதாகவும், இந்த மைலேஜ் ARAI ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளது எனவும் HeroMotoCorp கூறுகிறது.