விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சீனாவானது பணிபுரிந்து வருகிறது. இதற்கிடையில் கட்டுமானபணி முடிவடையாத சீனவிண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவி ஈர்ப்பு விசையுடைய வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற் பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்குரிய பணிகள் சென்ற ஜூலை மாதம் துவங்கிய நிலையில், தாலே கிரஸ் மற்றும் அரிசிவகை ஆகிய இரண்டு வகை செடியை அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.
இவற்றில் தாலே கிராஸ் 4 இலைகளை உற்பத்தி செய்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அரிசி விதை சுமார் 30 செ.மீ உயரத்திற்கு வளர்ந்து விஞ்ஞானிகள் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிகமிருக்கும் என்பதால், இங்கே தாவரங்கள் எப்படி நடந்து கொள்கிறது என்பது பற்றி அறிந்துகொள்ள சீன விஞ்ஞானிகள் இந்த அறிவியல் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ற வருடம் ஜூலை விண்வெளியிலிருந்து திரும்பி கொண்டுவந்த விதைகளை வைத்து முதல்தொகுதி அரிசியை அறுவடை செய்தனர்.
சொர்க்கத்திலிருந்து வந்த அரிசி என பெயரிடப்பட்ட இந்த வகை அரிசிக்கான 40 கிராம் விதைகள், 7.6 லட்சம் கி. மீ தொலைவுக்கு நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு பூமிக்கு திரும்பி கொண்டுவரப்பட்டது. அப்படிஒரு சூழ்நிலையில் இப்போது விண்வெளியில் அரிசி விதை வளர்ந்துள்ள நிகழ்வு பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதிக கதிரியக்கங்கள், புவிஈர்ப்பு விசையற்ற சூழல் ஆகிய சுற்றுசூழலில் விண்வெளியில் சீன விஞ்ஞானிகள் அரிசியை உற்பத்தி செய்திருப்பது, விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டமாக உற்றுநோக்கப்படுகிறது.