பாகிஸ்தான் பெண் ஒருவர் தனது வீட்டில் வேலைக்கு நியமிக்கப்பட்ட வேலைக்காரர் மீது காதல் கொண்டு அவரையே கரம்பிடித்து இருக்கிறார். பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் பகுதியில் வசித்து வருபவர் நாசியா. நிலப் பிரபுவான இந்த நடுத்தர வயது பெண்மணி, தன் தோட்டம் மற்றும் வீட்டை பராமரிக்க சூபியான் என்ற நபரை பணிக்கு சேர்த்தார். இதையடுத்து அவர் அந்த வீட்டை பராமரிப்பது, சமைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது என பல்வேறு வேலைகளை பொறுப்புடன் செய்து வந்தார். இதனிடையில் வீட்டின் உரிமையாளரான நாசியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதும், அவரை அருகிலிருந்து கவனித்துக்கொண்டார். அவருடைய இந்த எளிமையும், அக்கறை உணர்வும் நாசியாவை பெரிதும் கவர்ந்துவிட்டது.
இதற்கிடையில் அவரைவிட அந்த ஆண் வயது குறைந்தவர் ஆவார். எனினும் ஒருநாள் அந்த பெண், அவரிடம் வெட்கத்தைவிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். இதனை எதிர்பார்க்காத சூபியான், அதிர்ச்சியில் ஒரு நிமிடம் மயங்கிவிட்டார். அதனை தொடர்ந்து இருவரும் ஒருவர் ஒருவர் காதலை ஏற்றுக்கொண்டு நட்போடு பழகிவந்து திருமணம் செய்து கொண்டனர். இச்சம்பவத்தை அவர்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்து அனைவரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கின்றனர்.
அதன்பின் ஒரு பேட்டியில் அவர்கள் கூறியதாவது, என்னுடைய கத்ரீனா கைப் நாசியா எனவும் அங்கு வேலைக்காரராக பணியில் சேர்ந்த சூபியான் தான் எனக்கு சல்மான் கான் எனவும் மாறிமாறி புகழ்ந்தனர். தங்களுடைய காதல், பொருள், பணம், அழகு போன்றவற்றை பார்த்து வரவில்லை. வயது அதிகமுள்ள பெண், வயதுகுறைவான நபரை திருமணம் செய்ய அங்கு எதிர்ப்புகள் இருந்தாலும், அவர்கள் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். கூடியவிரைவில் தன்னுடைய சொத்துக்களை கணவரின் பெயருக்கு மாற்றப்போவதாகவும் நாசியா கூறினார்.