நம் நாட்டில் 5G சேவையை வழங்க துவங்கியதன் வாயிலாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற 2 நிறுவனங்கள் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களாக உருவெடுத்துள்ளது. இப்போது இந்த 2 தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ரூபாய்.500க்கும் குறைவான விலையில் பிராட்பேண்ட் திட்டத்தை அளிக்கிறது. ஜியோ பைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பைபர் போன்றவை இந்தியச் சந்தையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் அதிகமாகவுள்ள முக்கிய பிராண்டுகள் ஆகும்.
Airtel எக்ஸ்ஸ்ட்ரீம் பைபர் ஆனது ரூபாய்.499ல் ஒரே ஒரு பிராட்பேண்ட் திட்டத்தைக் கொண்டு உள்ளது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பைபர் வழங்கும் இந்த ரூபாய்.499 திட்டம் 40 எம்பிபிஎஸ் வேகம் மற்றும் ஒவ்வொரு மாதமும் 3.3டிபி டேட்டாவுடன், தினமும் அன்லிமிடெட் அழைப்புகளுக்கான நன்மைகளையும் அளிக்கிறது. அத்துடன் இத்திட்டத்துடன் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், வின்க் மியூசிக், பாஸ்டேக் ஆகிய பலவற்றிற்கான அணுகலை பெற முடியும்.
ஜியோ பைபர் ஆனது ரூபாய்.500க்கு கீழ் 3 வித திட்டங்களை உங்களுக்கு அளிக்கிறது. அவற்றில் ஒன்று ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். மற்ற 2 போஸ்ட்பெய்ட் திட்டங்களாகும். ஜியோ பைபர் வழங்கக்கூடிய ப்ரீபெய்ட் திட்டம் ரூபாய்.399க்கு கிடைக்கிறது. இத்திட்டத்தில் பயனாளர்கள் 30 எம்பிபிஎஸ் வேகம், ஒவ்வொரு மாதமும் 3.3டிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். அத்துடன் இலவச அன்லிமிடெட் அழைப்புகளும் வழங்கப்படுகிறது. அதன்பின் இதன் போஸ்ட் பெய்ட் திட்டங்களில் ஒன்று ரூபாய்.399 விலையில் கிடைக்கிறது. ரீபெய்ட் திட்டத்தைப் போல் இது பலன்களை அளிக்கிறது. எனினும் இச்சலுகை புது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மேலும் இச்சேவை 6 மற்றும் 12 மாதங்களுக்கு வழங்கபடுகிறது.
ஜியோ பைபரின் அடுத்த போஸ்ட் பெய்டு திட்டமானது ரூபாய்.499 விலையில் கிடைக்கிறது. இவற்றில் 400+ டிவி சேனல்களுக்கான நன்மைகள் மற்றும் ஓடிடி நன்மைகளும் கிடைக்கிறது. அத்துடன் இதில் 300 எம்பிபிஎஸ் இணைய வேகத்துடன் யுனிவர்சல்+ அல்ட் பாலாஜி, ஈரோஸ் நவ், லயன்ஸ்கேட், ஜியோ சினிமா, ஷெமரூமீ மற்றும் ஜியோசாவன் ஆகிய ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது. எனினும் இந்த போஸ்ட் பெய்டு திட்டம் ஏர்டெல்லின் ரூபாய்.499 திட்டத்தைவிட குறைவான இணையவேகத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.