கடந்த 2018 ஆம் வருடம் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து கன்னட நடிகர் யஷ் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர்கள் கூட்டணியில் இப்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது. இப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்தபடியாக தன் புதிய திரைப்படத்திற்காக யஷ் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அந்த அடிப்படையில் அடுத்து நடிக்கும் படத்துக்காக தன் நீண்ட தாடி, தலைமுடியை ட்ரீம் செய்து யஷ் ஸ்மார்ட்டாக மாறியிருக்கிறார். சென்ற 6 வருடங்களுக்கு பின் பெரியளவில் வளர்த்து வைத்திருந்த தன் தலை முடி, தாடியை குறைத்து புதிய கெட்டப்புக்கு யஷ் மாறியுள்ளார். இவரின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.