Categories
மாநில செய்திகள்

WOW! 1 மாதம் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்…. தமிழகத்தில் அட்டகாசமான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ஒருகிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை மதுரையைச் சேர்ந்த இறைச்சிக்காரர் ஒருவர் அறிவித்துள்ளார்.

திருமங்கலத்தில் மகிழ் என்ற பெயரில்  இறைச்சிக் கடையை நடத்திவரும் சந்திரன்,  தனது கடையில் ஒரு கிலோ இறைச்சி வாங்குவோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆடி மாதம் முழுவதும் இந்த சலுகை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

இங்கு  ஆடு, நாட்டுகோழி, வாத்து, முயல், வான்கோழி, காடை, கருப்புக்கோழி, கின்னிக்கோழி எனபல ரகங்களில் இறைச்சிகள்  விற்கப்படுகிறது.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக் கடையை தொடங்கிய சந்திரன், அப்போதே  1 கிலோ இறைச்சிக்கு 6 முட்டை இலவசம் 12 முட்டை இலவசம் என பல்வேறு அதிரடி ஆஃபர்களை வழங்கியுள்ளார். தற்போது ஒரு கிலோ இறைச்சிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு மூலம் அனைவரையும் திக்குமுக்காட செய்துள்ளார்.

இது குறித்து சுந்தரம் கூறுகையில்,  மக்களுக்கு நல்ல சத்தான இறைச்சிகளை வழங்க வேண்டும் என்பதற்காக உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இறைச்சிகளை விற்பதாக தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு ஆடி மாதம் அதிரடி ஆபராக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி வருவதாகவும் ஆடி மாதம் முழுவதும் இந்த ஆஃபர் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |