Categories
தேசிய செய்திகள்

WOW: 1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு இந்த வருடம் பட்ஜெட்டில் முதல்-மந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார். அந்த வகையில் சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. அத்துடன் 3 வருடங்களுக்கு இணைய இணைப்பும் வழங்கப்படுகிறது.

இதற்குரிய திட்டசெலவு ரூபாய்.12 ஆயிரம் கோடியாகும். இதனிடையில் இந்த திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது. இணைய இணைப்பு அளிப்பதற்கு 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளது. அதில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பண்டிகைகாலம் துவங்குவதற்குள் முதற்கட்ட ஸ்மார்ட் போன்களை வழங்குவதற்கான பணிகளை ராஜஸ்தான் அரசு முடுக்கிவிட்டுள்ளது.

Categories

Tech |