தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தி வழங்க பரிசீலனை செய்ய இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். எனவே 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தங்கள் பகுதியில் நலனுக்காக மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.