Categories
தேசிய செய்திகள்

WOW : 3,425 மணல் லட்டுகளால் ஆன விநாயகர் சிலை…. மணற் சிற்பக் கலைஞர் அசத்தல்…..!!!

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஒவ்வொரு வீடுகள் மற்றும் பொது இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலையை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகிறார்கள். அதிலும் ஒரு சில விநாயகர் சிலைகள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.விதவிதமான பாணியில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒடிசாவில் பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி மிகப் பெரிய மணல் லட்டு விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். இந்த சிலை செய்ய பூக்கள் மற்றும் 3,425 மணல் லட்டுகளை சுதர்சன் பட்நாயக் பயன்படுத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |