உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் 2 வயதான பெண்களின் நட்பு தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பேரன் ஒருவர், தனது பாட்டியை அவரது சிறுவயது தோழியுடன் சந்திக்க வைத்துள்ளார். ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு பிறகு தனது தோழியை சந்தித்த பாட்டியின் முகத்தில் தோன்றிய புன்னகை நெட்டிசன்களை ரசிக்க வைத்துள்ளது.